.

Thursday, April 10, 2014

பேன் தொல்லை நீங்க...


கூந்தலில் வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேன். அது பெரிதும் தலையில் பொடுகு அதிகம் இருப்பதாலேயே வருகிறது. மேலும் நம்மை சுற்றியுள்ள இடத்தில் அதிகமான அளவு தூசிகள் இருந்தால், அந்த தூசிகள் தலையில் தங்கி, பொடுகை உருவாக்குகின்றன.



மேலும் நாம் படுக்கும் இடங்களும், நாம் பயன்படுத்தும் துணிகளும் சுத்தமாக இல்லையென்றாலும், நம் தலையில் பேன், பொடுகு, ஈறு போன்றவை எளிதில் வந்து நடனமாடுகின்றன. அத்தகைய தொல்லைகளை எளிதில் நீக்க வீட்டிலேயே ஈஸியான சில வழிகள் உள்ளன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பேன் தொல்லை நீங்க... 

* துளசி மிகவும் சிறந்த மூலிகைப் பொருள். அத்தகைய கருந்துளசியை படுக்கும் தலையணையில் பரப்பி விட்டு, அதன் மேல் ஒரு வெள்ளைத் துணியை விரித்து, தூங்க வேண்டும். இதனால் தலையில் இருக்கும் பேன்கள் அதன் வாசத்திற்கு தலையில் இருந்து வெளியேறிவிடும்.

* வில்வக்காயை நன்கு காய வைத்து பொடி செய்து, அதனை சீயக்காய் பொடியுடன் சிறிது கலந்து, தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் தலையில் பொடுகும் பேனும் போவதோடு, கண்ணுக்கு மிகவும் நல்லது.

* தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிந்து, தலையில் தேய்த்து ஊற வைத்து, குளிக்க வேண்டும். இதனால் பேன் முற்றிலும் அழிந்து விடும்.

* கூந்தலை அலசும் போது, தலைக்கு சீயக்காய் மற்றும் புளித்த தயிரை சேர்த்து, அதனை தலைக்கு தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, பின்பு கூந்தலை அலச வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்குவதோடு, கூந்தலும் மென்மையாகும்.

* நன்கு புளித்த தயிரை தலைக்கு தடவி, அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு கூந்தலை அலசினால், தலையில் இருக்கும் பேன் மற்றும் பொடுகு போய்விடும்.

* மருதாணி விதை,சிறிது வெந்தயம் மற்றும் வசம்பு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு , காய வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், பேன் மற்றும் பொடுகுத் தொல்லை நீங்கும்.

 இவ்வாறெல்லாம் இயற்கை முறையில் கூந்தலை பராமரித்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர்வதோடு, பேன் மற்றும் பொடுகு தொல்லை இல்லாமல் அழகாக இருக்கும்

Disqus Comments