.

Monday, March 24, 2014

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை …!



சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை …!
1.பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆரா யுங்கள்.உங்களால் அடிபாகத்தை பார்க்க முடிய வில்லை என்றால் கண்ணாடியை யோ, மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள்.



2.கால்களை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருங்கள். வெதுவெ துப்பான நீரில் தினமும் கால்களை கழுவு ங்கள். விரல் இடுக்குகளில் கரபெரள வராமல் பார்த்துக் கொள்ளு ங்கள்.

3. சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதக்கப் படுவதால் வியர்ப்பது குறைந்து தோல் வறண்டு விடும், வறண்ட தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்பட்டுத் தொற்று ஏற்படலாம், எனவே தோல் வறண்ட நிலை ஏற்பட்டால் அதனை ஈரப்படுத்துங்கள்.

4. இரத்த ஓட்டம் ஒழுங்காக நடைபெற உட்கா ரும்போது கால்களைத் தூக்கி வையுங்கள்.மேலும் கணுக்கால் களையும் விரல்களையும் அசைத்துக்கொண்டே இருக்கவும். இறுக் கமான காலுறைகளை அணிய வேண்டா ம். கால் மேல் கால்போட்டு அமருவதை தவிர்க்க வும்.

5. வியர்வையை உறிஞ்சும் பருத்தியினாலா ன காலுறைகளையே தேர்ந்தெடுத்து அணி யவும். நைலான் வகைகளை தவிர்க்கவும். ரப்பர் மற்றும் எலாஸ்டிக் வளையங்கள் உள்ளவற்றை தவிர்க்கவும். சரியாக பொரு ந்தாத காலுறைகள் தோலில் உரசிக்காயங் கள் ஏற்படுத்து மாதலால் அதனையும் தவி ர்க்கவும்.

6. கால் நகங்களை வெட்டும் போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் விரல் நுனி வரை உள்ளவாறு பார் த்துநகங்களை வெட்டவும். ஓரங்களில் உள்ள கூர்மையான பகுதயைத் தேய்த்து மழுங்கச் செய்யவும்.உங்கள் விரல் நகங் களைச் சுற்றித் தோல் சிவந்து காணப்பட் டால் உடனே உங்கள் மருத்துவரிடம் காட் டவும்.

7.வெயில் காலங்களில் சூட்டுக் கொப்புளங்கள் ஏற்படாத வகையி ல் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். வீட்டிரும்கூட சாதாரணக் காலணி களுடன் இருக்கபே நல்லது.

சில பேர் காலணிகளை அதிக விலைக் கொடுத்து வாங்குவார்கள். அந்த காலணிகள் அவர்களின் காலுக்கு அணியாக இல்லாமல் விலங்காகவும் மாறி விடுகிறது.காலணிகள் கண்டிப்பாக அழகா க இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எள்ளளவு ம் மாற்றுக் கருத்தி ல்லை என்றாலும் அது நமக்கு வசதியாகவும் இருக்க வேண்டும்.

சில காலணிக ள் கால்களை இறுக்கி பிடித்தபடி இருக்கும். நடக் கிறபோது காலில் உரசி உரசி சின்ன சின்ன புண்க ளை ஏற்படுத்தும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் செருப்புகளை வாங்கும்போது தன் காலுக்கேற்ற பாதிப்பில்லாத வசதியானதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Disqus Comments