.

Saturday, March 8, 2014

பானி பூரி செய்வது எப்படி





தேவையான பொருட்கள்:

ரவை - கப்
மைதா - ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு துளி
உப்பு - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்


பானி செய்ய: 

புதினாமல்லி இலை - 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சைமிளகாய் - 8புளி - சிறிய எலுமிச்சை அளவு
வறுத்த சீரகம் - 1.5 ஸ்பூன்
ப்ளாக் சால்ட் - 1.5 ஸ்பூன்
உப்பு கொஞ்சம்

இனிப்பு சட்னி: 

கொஞ்சம் புளிபேரிச்சம் பழம்சிறிது வெல்லம்மிளகாய் பொடிபெருங்காயம்உப்புசேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து கொண்டால் இனிப்பு சட்னி ரெடி. தேவைப்படுபவர்கள் இந்த சட்னியை கலந்து கொள்ளலாம்.இல்லையேனில் பானி மட்டும் போதும். புளியை 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். மற்ற எல்லா பொருட்களையும் அந்த புளி தண்ணீரில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவையான தண்ணீர் கலந்து வைத்து கொள்ளவும்.

பூரி செய்முறை: 

ரவை,மைதா,சோடா,உப்பு கொஞசம் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி இடுவது போல் தேய்த்துசிறிய பாட்டில் மூடியை வைத்து ஒரே மாதிரி கட் செய்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடு செய்து பூரியை பொரிக்கவும்.

சாப்பிடும் முறை:

(
இது அனைவரும் அறிந்ததேஇருப்பினும் கோப்புக்காக ;-)பொரித்து வைத்துள்ள பூரியில் நடுவில் ஓட்டை போட்டு பானி தண்ணீர் கொஞ்சம்,இனிப்பு சட்னி கொஞ்சம்ஊற்றி சாப்பிடவும். பச்சை வெங்காயம் பிடித்தவர்கள் பொடியாகநறுக்கி மேலே தூவி சாப்பிடவும். கேரட்பீட்ரூட்டையும் துருவி மேலே போட்டும்சாப்பிடலாம். அப்போது சட்னி கொஞ்சம் அதிகமாக ஊற்றி கொள்ள வேண்டும். இனிப்பு,காரம்புளிப்பு எல்லாம் சேர்ந்து சூப்பர் சுவையாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்.டைம் கிடைக்கும் போது பூரியை செய்து வைத்து கொண்டு சைட் டிஷ்ஷை நிமிடத்தில்செய்து விடலாம்.
Disqus Comments