.

Wednesday, March 12, 2014

சுவையான முட்டை நூடுல்ஸ்



இன்றைய குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ இல்லையோ, மேகி, நூடுல்ஸ் போன்றவை மிகவும் பிடிக்கும். அத்தகையவற்றில் இப்போது புரோட்டீன் அதிகம் உள்ள முட்டையை சேர்த்து, ஒரு நூடுல்ஸ் செய்து பள்ளிக்கு செல்லும் போது கொடுத்தால், குழந்தைகள் மிச்சம் வைக்காமல் காலி செய்து கொண்டு வருவார்கள். இப்போது அந்த முட்டை நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:

முட்டை - 2 (அடித்தது)
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும், நூடுல்ஸை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, 2 துளிகள் எண்ணெய் விட்டு, பின் குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உடைத்து அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பொரியல் போல் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.

பின்பு அதில் சோயா சாஸ் ஊற்றி, 1 நிமிடம் கிளறி, இறுதியில் நூடுல்ஸ் மற்றும் முட்டையை போட்டு, தொடர்ந்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

இப்போது சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி!!!
Disqus Comments