.

Friday, March 7, 2014

அருகம்புல்லின் பலன்கள்



நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?


நமது உடலில் ஊட்டச்சத்து பெருக வேண்டும் என்பதற்காக ஹோர்லிக்ஸ், ஓவல்டின், போன்ற பானங்களைஸ் சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து முலிகை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.

நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன் சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே 
முறையைக் கையாளலாம்.

அருகம்புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும்.

திடிரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக்  கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் 
ஆறிவிடும்.








அருகம்புல் ஜூஸ்


தேவையான பொருட்கள்.....

அருகம்புல் -1 கட்டு
தேன் - 2 டேஸ்பூன்
ஏலக்காய் - 1 சிட்டிகை

செய்முறை.....

* அருகம்புல்லை நன்கு கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

• பின் அதனுடன் தேன், ஏலக்காய்ப் பொடி சேர்த்து பருக வேண்டும்.

• அருகம்புல் அடிக்கடி சேர்ப்பது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். உடல் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய உதவும்
Disqus Comments