.

Thursday, September 11, 2014

குடலிறக்கம் நோய்க்கான 8 முக்கிய காரணிகள்!!

குடலிறக்கம்

ஹெர்னியா என்றால் உண்மையில் என்னவென்று நம்மில் பலருக்குத் தெரியாது. மேலும் திசுக்களின் அளவுக்கு அதிகமான வளர்ச்சி அல்லது கொழுப்பு என்றே நம்மில் பலர் கருதுகின்றனர். எனினும் மருத்துவர்கள் கூற்றுப்படி, உடலின் வெளிப்புற சுவர்களை நோக்கி உடல் உள்ளுறுப்புகள் புடைப்பதன் காரணமாகவே ஹெர்னியா உருவாகிறது.
பொதுவாக இந்த அசாதாரண நிலை தசைகளின் பலவீனம் காரணமாக ஏற்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஹெர்னியா எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும் மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும், தீவிர நிலைகளில் இது மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாறும். பெரும்பாலும், அறுவை சிகிச்சைக்குப் பின் ஹெர்னியா உருவாகிறது, ஆனால் ஹெர்னியாவை உருவாக்கும் வேறு சில காரணிகளையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அவை பின்வருமாறு;

திசுச் சிதைவு 

காயம் காரணமாக திசுக்களில் ஏற்படும் கிழிஞ்சல்கள் பெரும்பாலும் ஹெர்னியா உருவாவதில் தொடர்புபடுத்தப்படுகிறது. உள் உறுப்புகள் எளிதாக புடைப்பதற்கு திசுச் சிதைவு வழிவகுக்கிறது, எனவே இது ஹெர்னியாவை ஏற்படுத்துகிறது.

முதிர்ந்த வயது 

இளவயதினருடன் ஒப்பிடுகையில் வயது முதிர்ந்தவர்களுக்கு ஹெர்னியா பாதிப்பு அதிகம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வயது முதிர்ந்தவர்களில் தசைகள் (வயிற்றுத் தசைகள் உள்பட) பலவீனம் அடைவதால் இது உள்ளுறுப்புகள் புடைப்பதற்கு வழிவகுக்கிறது.

பாலினம்

பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு ஹெர்னியா உருவாகும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலான ஆண்களுக்கு இடுப்புப் பகுதியில் தான் ஹெர்னியா ஏற்படுகிறது. ஆண்களின் இடுப்பு தசைகள் பலவீனமானவை, இது ஹெர்னியா ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

அறுவைச் சிகிச்சை 

அறுவைச் சிகிச்சைக்கு பின் ஏற்படும் ஹெர்னியா பொதுவான ஒன்றாகும், குறிப்பாக வயிற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்களில் அவர்கள் வாழிக்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இந்த வகை ஹெர்னியா உருவாவதற்கான வாய்ப்பு உண்டு. இது இன்சிஷனல் ஹெர்னியா (வெட்டுசார் குடலிறக்கம்) எனவும் அழைக்கப்படும். பொதுவாக இந்த வகை ஹெர்னியா பருமனான பெண்களில் ஏற்படுகிறது.

பிறப்புக் குறைபாடுகள் 

தொப்புள் பகுதி அருகில் ஏற்படும் வீக்கம் அல்லது புடைப்பு ஒரு வகை ஹெர்னியா எனப்படும், இது வழக்கமாக பிறந்த பின்னர் உருவாகிறது. வயிற்றுச் சுவரில் ஏற்படும் ஒரு பிறவிக் குறைபாடு இந்த வகை ஹெர்னியா உருவாகுவதற்கு காரணமாகும்.

மலச்சிக்கல் 

உங்களுக்கு நீண்ட நாளாக மலச்சிக்கல் இருந்து வந்தால், மிகவும் கஷ்டப்பட்டு மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த கடும் அழுத்தம் காரணமாக மென்மையான வயிற்றுத் திசுக்கள் கிழிவதற்கு வாய்ப்பு உண்டு, இது ஹெர்னியாவிற்கு வழிவகுக்கும்.


மரபியல் காரணிகள்

 தசைப் பலவீனம் மரபு வழி ஏற்படக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இந்த வகை தசைப் பலவீனத்தால் ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு ஹெர்னியா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

உடல் பருமன் 

வயிற்றுத் தசைகள் மேல் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதால், இது மெதுவாக அந்தத் தசைகளை பலவீனப்படுத்தும். இவ்வாறு தசைகள் பலவீனமாகுதல் ஹெர்னியா ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும்.
Disqus Comments