Thursday, November 22, 2018

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றி உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப் போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது.

பெண்கள் தெருவில் செல்லும் போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும். அதில், வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும் போது, பெண்கள் அவர்களது மெட்டியை கண்டு, அவனை எதிர் நோக்காமல் விலகிச் செல்வர். இவ்வாறு ஆணோ, பெண்ணோ திருமணம் ஆனவர்களா என்பதை உணர்த்துவதற்கான அடையாளமாகவே இவை அமைந்தன.


பிற காரணம்…: பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

முக்கியமாக கருப்பை நோய்களை கட்டு படுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் எமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளைக் குறைக்கும் என்கின்றனர்.
Disqus Comments