.

Saturday, April 4, 2015

யோகா செய்வதால் என்னென்ன நோய்கள் குணமாகும் ?

உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் உடலில் ஏதேனும் நோய் வந்தால், உடனே மருத்துவரை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி, தவறாமல் சாப்பிட்டு வருவார்கள். இதனால் எந்த தவறும் இல்லை. இருப்பினும் இந்த செயல் மட்டும் உடலில் ஏற்படும் நோய்களை முற்றிலும் சரிசெய்துவிடாது. எவ்வாறு உடலில் நோய் ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் காரணமோ, அதேப் போல் நோயை சரிசெய்ய ஒருசில செயல்களான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.

அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. எப்படியெனில் உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.

எனவே மருந்து மாத்திரைகளை சாப்பிட விரும்பாதவர்கள், யோகாவை தினமும் செய்து வர, பல நோய்களைக் குணப்படுத்தலாம். சரி, இப்போது எந்த யோகா செய்தால், எந்த மாதிரியான நோய்களை குணப்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!


ஆஸ்துமா

ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.


நீரிழிவு 

குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. ஆனால் யோகாவில் ஒன்றான இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.


உயர் இரத்த அழுத்தம் 
உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும். அதுவும் அதனை நாள்தோறும் பிராணயாமம் செய்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.



செரிமான பிரச்சனை 

அஜீரணக் கோளாறு ஒரு பெரிய நோய் இல்லாவிட்டாலும், தற்போது வேலை செய்வோருக்கு, இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு மருந்துகள் இருப்பினும், இங்கு காண்பிக்கப்பட்டுள்ள பாலாசனத்தை செய்து வருவதன் மூலம் நீக்க முடியும்.



ஒற்றை தலைவலி 

போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.



முதுகு வலி 

கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர் பலர் பாதிக்கப்படும் பிரச்சனைகளுள் ஒன்று தான் முதுகு வலி. இத்தகைய முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் ஒரு நிலையான, இங்கே குறிப்பிட்டுள்ளதை செய்து வர வேண்டும். இதனால் முதுகு வலியை சரிசெய்யலாம்.


மூட்டு வலி 

பலர் மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப்படுகின்றனர். இதனால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும், இந்த நிலையை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.



கல்லீரல் 

பிரச்சனை கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் யோகாசனத்தை செய்ய வேண்டும். அதற்கு சிறந்த நிலை, இங்கு குறிப்பிட்டுள்ள சேதுபந்தாசனம் தான்.



மனஇறுக்கம் 

மன அழுத்தத்தைப் போக்க சிறந்த வழி என்னவென்றால் அது யோகா தான். எனவே மாத்திரைகளை போட்டு மனதை அமைதிப்படுத்த விரும்பாதவர்கள், இதனை சரிசெய்ய உட்டானாசன நிலையை செய்யலாம்.
Disqus Comments