.

Friday, January 16, 2015

கொழுப்பு, மூட்டு வலி சர்க்கரை நோயை குணப்படுத்தும் லவங்கம்!


சர்க்கரை நோயை குணப்படுத்தும் லவங்கம்!

நாம் பிரியாணிக்கு அடிக்கடி பயன்படுத்தும் லவங்கம் வெறும் மசாலாப் பொருளாகத்தானே பார்த்து வந்தோம்!

ஆனால் இந்த லவங்கத்தை தினமும் மிகச்சிறிய அளவு (3 கிராம்) பயன் படுத்தினாலே நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும், சர்க்கரையின் சதவீதமும் குறைவதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ்.


அதனால்தான் நம் நாட்டில் மாமிச உணவை சமைக்கும்போது அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர்...

லவங்கத்தின் பிற நன்மைகள்..

ஒரு தேக்கரண்டி லகவங்கப்பட்டைத் தூளில் 28மி.கி. கால்சியம், 1மி.கி. இரும்புச் சத்து, விட்டமின் C, விட்டமின் K, மங்கனம் ஆகியவை உள்ளன.

இரத்த குளுக்கோஸை முறைப்படுத்தி டைப் 2 சர்கரை வியாதியை கட்டுப்படுத்துகிறது.

யீஸ்ட் (yeast) தொற்றைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது.

லூக்கேமியா மற்றும் லிம்ஃபோமா (leukemia & lymphoma) புற்றணுக்களின் பரவலை குறைக்கும் ஆற்றல் பெற்றது.

இரத்த உரைவை தடுக்கும் சக்தி பெற்றது

தினசரி காலையில் அரைத் தேக்கரண்டி லவங்கப்பட்டைத் தூளை ஒரு மேஜைக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி ஒரே வாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து, ஒரு மாதத்தில் வலியின்றி நடக்கவும் முடிந்துள்ளது.

உணவில் சேர்க்கப்படும்போது அது கிருமிநாசினியாக செயல்பட்டு உணவு கெட்டுப்போகாமல் தடுக்கின்றது.

உணவில் பூஞ்சனம் (பூசனம்) ஏற்படாமல் தடுக்கின்றது.
Disqus Comments