.

Thursday, April 3, 2014

தைராய்டு அறிகுறிகள் விளக்கங்கள்


தைராய்டு சுரப்பியை பெரும்பாலும் மூன்று விதமான நோய்கள் பாதிக்கின்றன. 

ஒன்று: ஹைப்போதைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறையும் நிலை. இரண்டு: ஹைப்பர் தைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும் நிலை. 

மூன்று: கோயிட்டர். அதாவது தைராய்டு சுரப்பியின் அளவு பெரிதாகி, கழுத்தில் கட்டி தோன்றும் நிலை. 

ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள்

 அதிகமான சோர்வு, தளர்ச்சி, எதையும் ஆர்வமாக செய்ய முடியாத சோம்பேறித்தன நிலை, உடல் எடை அதிகரித்தல், மனஉளைச்சல், மறதி ஏற்படுதல், மலச்சிக்கல், முடி உதிர்தல், சரும வெளியே தள்ளிவரும் நிலை, மாதவிலக்கு தைராய்டு அறிகுறிகள் வறட்சி, 

மாதவிலக்கு குளறுபடிகள், குழந்தையின்மை, உள்ளுக்குள் குளிர்ச்சி ஏற்படுதல், கொலஸ்ட்ரால் அளவில் வித்தியாசம் தோன்றுதல். ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள் அதிக சோர்வு, அதிக கோபம். அதிக பசியும், அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறையும் நிலை. 

இதய துடிப்பு அதிகரித்தல், உடல் நடுக்கம், மூச்சுவிட சிரமப்படுதல், அடிக்கடி மலம் கழிக்க தோன்றும் நிலை, கை-கால் நடுக்கம், அதிக உடல்சூடு, வியர்வை, கண்கள் கோளாறு, கருச்சிதைவு போன்றவை.  

* எல்லா தைராய்டு நோய்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும்: ?

= சரியல்ல. ஹைப்போதைராய்டிசம் தவிர்த்து பெரும்பாலான தைராய்டு நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டியதில்லை.  

* தைராய்டு நோய் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்: ? 

= பாரம்பரியத்தாலும், வாழ்வியல் நடைமுறைகளாலும்தான் பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் காரணமாக ஒருவருக்கு உடல் எடை அதிகரித்தால் தைராக்சின் சரியான அளவில் கொடுத்து, உடல் எடையை கட்டுப்படுத்திவிடலாம். 

* தைராய்டு நோயாளிகள் முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை சாப்பிடக்கூடாது? 

= சரியல்ல. மேற்கண்ட இரண்டு காய்கறிகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் நெருக்கடி ஏற்படும். அதனால் முட் டைக்கோஸ், காலிபிளவர் இரண்டையும் முற்றிலுமாக தவிர்க்கவேண்டியதில்லை. 

* தைராய்டு நோய் இல்லற வாழ்க்கைக்கும், கர்ப்பத்திற்கும் தடையாக இருக்கும்?

= சரியல்ல. டீன்ஏஜ் பெண்களுக்கு தைராய்டு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், இந்த தவறான நம்பிக்கையால் பெற்றோர் பெருந்துயரத்திற்கு உள்ளாகிறார்கள். சரியான சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயால் குடும்ப வாழ்க்கையில் எந்த பாதிப்பும் வராது. கர்ப்பமாவதற்கும் தடை ஏற்படாது. 

*  கர்ப்பகாலத்தில் தைராய்டு நோய்களுக்கான மருந்தை சாப்பிடக்கூடாது?

= சரியல்ல. கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியதிருக்கும். தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலத்திற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தைராய்டு நோயாளிகள், ஹார்மோன் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை கட்டாயம் பெறவேண்டும். 

* எல்லா விதமான தைராய்டு நோய்களை கண்டறியவும் ஸ்கேன் பரிசோதனை அவசியம்?

= சரியல்ல. பெரும்பாலான தைராய்டு நோய்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் அவசியமில்லை.  

* எல்லா தைராய்டு கட்டிகளுக்கும் ஆபரேஷன் தேவை?

= சரியல்ல. பெரும்பாலான கட்டிகள் ஆபத்தானவை அல்ல. அதனால் ஆபரேஷன் தேவையில்லை. சரியான பரிசோதனைகளை டாக்டர் ஆலோசனைபடி மேற்கொண்டு, சரியான சிகிச்சையை பெற்றால் ஆபரேஷன் தேவைப்படாது. 

* ரேடியேஷன் சிகிச்சை ஆபத்தானது?

= சரியல்ல. மிக குறைந்த அளவில் உள்ள ரேடியோ கதிர்களே இதில் பயன்படுத்தப்படுகிறது.

Disqus Comments