.

Saturday, April 5, 2014

மூல நோய் அறிகுறிகள்


பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அது எந்தெந்த காரணங்களால் வருகிற து? இதைச்சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையி ன் மூலம் காண்போம்.

மனித உடலில் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் கார ணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மல வாயில் எச்சல், நமைச்சல், அப்பு சில நேரங்களில் வலி முதலிய செய் கைகளை உண்டாக்குவது மூலத் தின் அறிகுறிகள் ஆகும்.

மலம் கழிக்கச்செல்லும்போது மலத்தை இறுகச்செய்து மலம் போக முடியாத அளவிற்கு கஷ் டத்தைக் கொடுக்கும். நாமே முயற்சி செய்து மலத்தை வெளி யாக்க முயலும்போது நீர் வற ண்டு மலம் தீய்ந்து இறுகி இரத்த நாளங்களைக் கீறி அதிலிருந்து கசியும் இரத்தத்தோடு மலம் கழியும்.

மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்கு களின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும் மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயில் வலி, கடுப்பு, எச்சல், நமைச்ச ல், அப்பு வீக்கம் முதலியவையை யும் உண் டாக்கும்.
நோய் வரும் வழி:

* கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் உண்ணும்போ து அவை மலக்குடலின் கீழ் பாகத்தில் வாதத்தை அதிகம் உண்டாக்கி மலத்தை இறுகச் செய்து இந்த நோயி னை உண்டாகும்.

* கிழக்கு வகைகளை அதிகம் உட்கொ ள்வதாலும், அதிக காரம் உள்ள உண வுகளை அதிகம் உட்கொள்வதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலு ம், உணவில் காரத்தை அதிகம் சேர்த் துக் கொள்வதாலும் மூல நோய் வரலாம்.

* மலவாயை உறுத்தும்படி எப்போது ம் உட்கார்ந்திருப்பதும், குதிரை, யா னை, ஒட்டகம் இவற்றில் சவாரி செய் வதாலும், உண்ட உணவு செரிக்காம ல் இருப்பதாலும் வயிற்றில் மந்தத் தை உண்டு பண்ணக்கூடிய உணவுக ளை உட்கொள்வதாலும் வரலாம்.

* யோக நிலையில் தன்னுடைய உடலின் தன்மைக்கும், வன்மைக்கும் அதிகமாக நிலைத்திருந்தல் காரணமாகவும், அதிக நேரம் மூச்சை அடக் குவதன் காரணமாகவும் இந்த நோய் வரக்கூடும்.

* பெண்கள் கருத்தத்துள்ள போது குழந்தை வளர வளர கீழ்க்குடல் அழுத்தப்படும்போதும், ஒரு சில ருக்கு வயிறு பெருத்து பெருவ யிறு நோய் முதிர்ந்து பெரியதாகும்போது இந்நோய் உண்டாவதும் உ ண்டு.

* சில நேரங்களில் தாய் தந்தைய ருக்கு இந்த நோய் இருந்தால் அப் பெற்றோர்களின் உடல் வாகைப் பொறுத்து அவர்களின் சந்ததியின ருக்கும் இந்த நோய் வரலாம்.

* மேலும் பசி நேரங்களில் சாப்பிடா மல் பசியை அடக்குவதாலும், பட்டி னி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகத்து மூச்சூடு உண்டாகி மலத்தை வெளியில் போகாத படி அடக்கி மலவாயில் அனலை அதிகம் உண்டாக்கி இந்த நோய் உண்டாகும்.

* மேலும் வாயுவைப் பெருக்கக் கூடிய உண வுகளாலும், செயல்களாலும் மலபபாதை கெட்டு மலத்தை இறுகச்செய்து மலம் வெளி வராதபடி செய்யும்.

* மலவாய் எச்சல், விந்து கெடுதல், வயிறு இரைதல், வயிறு நொந்து கழிதல், பசியின் மை, புளி ஏப்பம், நீர்வேட்கை, உடல் மெலித ல், உடல் பலம் குறைதல் போன்ற நிலைகளை உண்டாக்கும்.

* மூலநோயானது மனரீதியாகவும் பாதி ப்படையச் செய்யும். மனந்தளரும், அடிக் கடி கோபம் கொள்ளச் செய்யும். தேவை யில்லாமல் எதற்கெ டுத்தாலும் சீறிவிழ ச்செய்யும். முகம் வேற்றுமை அடையு ம் முகத்தில் விளக்கெண்ணெய் பூசியது போலிருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் மூலநோய் உண்டானவர்களுக்கு ஆரம்பக் காலத்தில் அறியலாம்.


Disqus Comments